×

நாங்குநேரியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

நாங்குநேரி: நாங்குநேரி - திசையன்விளை கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. நாங்குநேரி மற்றும் திசையன்விளை தாலுகாக்களுக்கு பத்தமடை தாமிரபரணி ஆற்றிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை எடுத்து செல்லும் முக்கிய குழாய்களில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறி வருகிறது. நாங்குநேரி உள்பட பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து தேவை உயர்ந்து வரும் நிலையில் சிங்கிகுளம், பூலம், பாணாங்குளம், தாழைகுளம், நாங்குநேரி, ஏமன்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த சில நாட்களாக சாலையோரம் குளம்போல தேங்கி நிற்கின்றன.

அடிக்கடி குழாய் உடைப்பு சீரமைக்கும் பணி நடைபெறுவதாக கூறி பல நாட்கள் இப்பகுதியில் தாமிரபரணி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. கோடைகாலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக குடிநீர் திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் போதிய பராமரிப்பின்றி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகள் சீரமைக்கப்படாமல் இருப்பதன் மூலம் வீணாகும் குடிநீரை பார்த்த பொதுமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர். எனவே திசையன்விளை கூட்டு குடிநீர் திட்டக்குழாயில் அடிக்கடி ஏற்பட்டு வரும் பழுதுகளை நிரந்தரமாக சீரமைத்து இரு தாலுகா மக்களுக்கும் தட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nonguneri , Nonguneri, pipe breakage, wasted drinking water
× RELATED நாங்குநேரி காங். வேட்பாளர் அறிவிப்பு...