×

நித்திரவிளை அருகே அதிகாரிகள் அலட்சியத்தால் மின் கம்பத்துக்கு ஊன்று கோல்

நித்திரவிளை: மருதங்கோடு துணை மின் நிலையத்தில் இருந்து ஆலங்கோடு அருகே ஏழுதேசம் - கொல்லங்கோடு கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்திற்கு உயர் அழுத்த மின்சாரம் செல்கிறது. இந்த உயர் அழுத்த மின்கம்பி செல்லும் பாதையில்,  நித்திரவிளை அருகே எஸ்டி மங்காடு, புதுக்கோடு என்னுமிடத்தில் கடந்த 20 நாளுக்கு முன்பு சாலையை  அகலப்படுத்த பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது மின் கம்பம் திடீரென ஒரு வீட்டை நோக்கி  சரிந்தது. தொடர்ந்து பெய்த மழையில் மின்கம்பம் சிறிது சிறிதாக சரிந்து வீட்டை நெருங்க துவங்கியது. இந்த உயர் அழுத்த மின்கம்பி வழியாக செல்லும் மின்சாரத்தின் தாக்கம் 10 அடி தூரம் வரை இருக்கும்.

இதனால் வீட்டில் வசிக்கும் பெண் மாற்றுத்திறனாளி, 2 பிள்ளைகளுக்கும் எப்போதும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் டயாஸ், நம்பாளி மின்வாரிய ஊழியர் ஒருவரிடம் கூறினார். 2 நாளில்  சரி செய்வதாக கூறியதோடு, ஜல்லி, மணல், சிமெண்ட் ஆகியவற்ைற தயார் நிலையில் வைத்திருங்கள் என்றும் ஊழியர் கூறியுள்ளார். உடனே வீட்டின் உரிமையாளரும் தேவையான பொருட்களை தயார் படுத்தி வைத்துள்ளார். ஆனால் குறிப்பிட்டபடி மின் ஊழியர்கள் யாரும் வரவில்லை.

இது தொடர்பா உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். அவரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. வேறு வழியில்லாமல் வீட்டின் உரிமையாளர் மின்கம்பம் சரிந்து வீட்டில் விழாதவாறு ஊன்றுகோல் கொடுத்து தாங்க செய்துள்ளார். ஆகவே நம்பாளி மின்வாரிய அதிகாரிகள் இந்த விசயத்தில் தனி கவனம் செலுத்தி உடனே சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Nitrivilai Nitrivilai , Sleep, authorities negligence, power pole
× RELATED பல ஆண்டுகளாக மின்கட்டணம் பாக்கி;...