×

கர்நாடகாவில் புதிய பாலத்திற்கு இந்துத்துவா சித்தாந்த வீரரான வீர சாவர்க்கரின் பெயர் சூட்ட கடும் எதிர்ப்பு : நிகழ்ச்சி ஒத்திவைப்பு

பெங்களூரு : கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து பெங்களூருவில் கட்டப்பட்ட புதிய பாலத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் இந்துத்துவா சித்தாந்த வீரரான வீர சாவர்க்கரின் பெயர் சூட்டும் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெங்களுருவில் உள்ள எலகங்கா தொகுதியில் புதிதாக கட்டப்பட பாலத்திற்கு இந்துத்துவா சித்தாந்த வீரரான வீர சாவர்க்கரின் பெயரை சூட்ட கர்நாடகா பாஜக அரசு முடிவு செய்திருந்தது. இதற்கான பெயர் சூட்டும் விழா இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாலத்திற்கு வீர சாவர்க்கரின் பெயரை சூட்டஎதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா சுதந்திர போராட்ட வீரர்களை பாஜக அவமதித்துவிட்டது என்பது எதிர்கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டாகும். கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், புதிய பாலத்திற்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. எனினும் பொது மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளதால் பாலம் திறப்பு நிகழ்ச்சி தள்ளிவைக்கப்படுவதாக கர்நாடகா அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பின்னர், சாவர்க்கர் பெயர் சூட்டப்பட்ட பாலம் திறக்கப்படும் என்று கர்நாடகா அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். திப்பு ஜெயந்தி விழாவிற்கு தடை விதிக்கும் பாஜக அரசு, பாலத்திற்கு வீர சாவர்க்கர் பெயர் சூட்டுவது முரண்பாடானது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.


Tags : Karnataka ,bridge ,Veer Savarkar ,Hindutva , Karnataka, New Bridge, Hindutva, ideology, heroic, heroic Savarkar
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!