×

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வருகின்ற ஜுன் 12ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு: ஏற்பாடுகளை தீவிரப்படுத்திய பொதுப்பணித்துறை

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வருகின்ற ஜுன் 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதற்கான பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து இதுவரை ஜூன் 12ம் தேதி 16 முறையும், ஜூன் 12ம் தேதிக்கு முன்பாக 10 முறையும், காலதாமதமாக 60 முறையும் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 17-வது முறையாக மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலமான ஜூன் 12ம் தேதி இந்த ஆண்டு தண்ணீர் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இருப்பதாலும் இந்த மாத இறுதிக்குள் கேரளா, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பிலும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது தமிழக கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை பெய்து வருவதால் கடந்த சில தினங்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 100.66 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 66 டிஎம்சி ஆகும். நீர்வரத்து 2,100 கன அடியாகவும் வந்து கொண்டிருக்கிறது.

Tags : Public Works Department ,Mettur Dam ,Delta , Mettur Dam, June 12, Public Works Department
× RELATED 300 ஏக்கர் விழல்கள் எரிந்து நாசம்