×

ஆனைமலை காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், கோடை கால  வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. இதில் விலங்குகள் அதிகம் நடமாட்டமுள்ள இடத்தில் சுழழும் கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனக்கோட்டதிற்குட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, டாப்சிலிப் ஆகிய 4 சரகங்கள், கடந்த 18ம் தேதி  கோடைகால வனவிலங்கு கணக்கெடுப்பு துவங்கியது. இப்பணி நேற்று முன்தினம் வரை தொடர்ந்து ஒரு வாரம் நடைபெற்றது. மொத்தம் 48,617 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பொள்ளாச்சி வனகோட்டத்திற்குட்பட்ட பகுதியில் வனக்காவலர், வேட்டைத் தடுப்பு காவலர், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் தனித்தனியாக பிரிந்து சென்று  கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

இதில் பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் பகுதியில் புலியின் கால்தடமும், போத்தமடை மற்றும் ஆயிரங்கால் குன்று, சர்க்கார்பதி உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் கால்தடம் பதிந்திருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் சிங்கவால் குரங்கு, வரையாடு, யானை, கரடிகள் நேரடியாக பார்த்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. வனச்சரக பகுதியில் சிறுத்தை  நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளதால், இவைகளை கண்காணிக்க சுழலும் கேமரா பொறுத்த நடவடிக்கை எடுக்கப்டுகிறது. வனச்சரகங்களில் ஏற்கனவே ஆங்காங்கே, வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அதிகம் நடமாடும் இடத்தை கணடறிந்து அந்த இடங்களில், விரைவில் சுழலும் கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Wildlife survey work,completed , Anaimalai Archive
× RELATED தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக...