×

மதுரை- திண்டுக்கல் சாலையில் உடைந்த தடுப்பால் விபத்து அபாயம்

சின்னாளபட்டி: மதுரை-திண்டுக்கல் சாலை அம்பாத்துரை பாலத்தில் ஆபத்தான முறையில் உள்ள உடைந்த இரும்பு தடுப்புகளால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை-திண்டுக்கல் தேசிய நான்குவழிச்சாலையில் அம்பாத்துரை ஆஞ்சநேயர் கோவில் அருகே தரைப்பாலம் உள்ளது. கடந்த மார்ச் 23ம் தேதி தூத்துக்குடியில் இருந்து திண்டுக்கல் வந்த கன்டெய்னர் லாரி இப்பாலத்தின் இரும்பு தடுப்பு வேலிகளை உடைத்து கொண்டு விபத்தில் சிக்கியது. இதை தொடர்ந்து லாரி மீட்கப்பட்டது.

ஆனால், கன்டெய்னர் லாரி மோதியதால் பாலத்தின் இரும்பு தடுப்புகள் உடைந்து ஆபத்தான முறையில் கத்திபோல் நீட்டி கொண்டுள்ளன.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘2 மாத காலமாகியும் தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் இரும்பு தடுப்புகளை சரிசெய்யாததால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி தேசிய நான்குவழிச்சாலை நிர்வாகம் உடைந்த இரும்பு தடுப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Madurai - Dindigul ,road accident , Madurai - Dindigul ,road, accident
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு