×

கொடைக்கானலில் இசேவை மையம் திறப்பு

கொடைக்கானல்: கொரோனா தடுப்பு ஊரடங்கால் கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களாக இசேவை மையம் செயல்படாமல் இருந்தது. இதனால் கொடைக்கானலில் இருந்து வெளியூர் செல்பவர்கள் இ பாஸ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. தனியார் நெட் சென்டர்களில் பொதுமக்கள் அதிகளவு கட்டணம் கொடுத்து இ பாஸ் எடுத்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தினகரனில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று கொடைக்கானல் அண்ணாசலையில் உள்ள இசேவை மையம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. வெளியூர் செல்பவர்கள் இ பாஸ் பெறுவதற்கு கட்டணமில்லா அரசின் இசேவை மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், வேறு ஏந்த சேவையும் இம்மையத்தில் தற்போதைக்கு அளிக்க முடியாது என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags : Opening ,Isawa Center ,Kodaikanal ,Isawa Center of Opening , Opening, Isawa Center, Kodaikanal
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா