கொரோனா ஊரடங்கால் வீடியோ கான்பரன்சிங் வழியாக மணமக்களை வாழ்த்திய உறவுகள்

பெரியகுளம்: பெரியகுளத்தில் கொரோனா ஊரடங்கால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாத உறவினர்கள் வீடியோ கான்பரன்சிங் முறையில் மணமணக்களை வாழ்த்தினர். பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் சுதாவிற்கும், மதுரையை சேர்ந்த கருணாநிதி மகன் சரத்பாபுவிற்கும் கடந்த ஏப்ரல் 26ம் தேதி மதுரையில் திருமணம் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உறவினர்கள் வெளியூர்களில் இருந்து வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மேலும் கால நீட்டிப்பு ஏற்படலாம் என்று தெரிந்து மதுரையில் நடைபெற இருந்த திருமணம் மணமகள் ஊரில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

நேற்று பெரியகுளத்தில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் 20 பேரை கொண்டு எளிய முறையில் திருமண மண்டபத்தில் திருமணம் நடத்தப்பட்டது. மணமக்கள் முகக்கவசம் அணிந்து கலந்துகொண்டனர். மணமகளின் தாய்மாமன் மற்றும் உறவினர்கள் அனைவரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் மணமக்களை வாழ்த்தி திருமணம் நடத்தப்பட்டது. வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம் பார்ப்போரை நெகிழச்செய்தது.

Related Stories:

>