×

இ பாஸ் மூலம் மாவட்டத்தில் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு: அச்சத்தில் பொதுமக்கள்

ஊட்டி: வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பலர் இ-பாஸ் பெற்று வருவதால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நீலகிரியில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அதிகாரிகள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.  கொரோனா பரவல் தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 14 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.  இந்த நிலையில்  ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை கடந்த வாரம் அறிவித்துள்ளது. அதன்படி இ பாஸ் பெற்றுக் கொண்டு மற்ற மாவட்டங்களுக்கு செல்லலாம் எனவும் தமிழக அரசு அறிவித்தது.  இதனை தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் வசிக்கும் பலர் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். அதேபோல், மற்ற மாவட்டங்களில் பணி நிமித்தமாக சென்ற பலரும் சொந்த ஊரான ஊட்டிக்கு வருகின்றனர். அங்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சென்னையை சேர்ந்த பலரும் தற்போது ஊட்டி வரத்துவங்கியுள்ளனர். அங்கு பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், அவர்கள் இங்கு வரும்போது, மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஏற்கனவே கர்ப்பிணிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவதாக கூடலூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நாள்தோறும் பலர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு இ பாஸ் பெற்று அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றனர்.  இவர்களை தடுக்க முடியாத நிலையில், அவர்களை சுகாதாரத்துறை பரிசோதனை செய்து நாள்தோறும் மாதிரிகளை கோவைக்கு அனுப்பி வைத்து வருகிறது. இதனால், வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்களின் மூலம் நீலகிரியில் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேசமயம், இதனை தவிர்க்க முடியாது என்பதால், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனைகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலம் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு  அதிகரிக்கும் நிலை வருமோ? என்ற அச்சத்தில்  அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.


Tags : district ,public , Opportunity , increase corona ,district, e-pass: public in fear
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...