×

இறைச்சிக்காக விற்கப்படுவதை தடுக்கும் வகையில், காங்கேயம் மாடுகள் ஆன்லைனில் விற்பனை : மென்பொருள் பொறியாளர் புதிய முயற்சி

சென்னை : வீரத்திற்கும் விவசாயத்திற்கும் பெயர் போன காங்கேயம் ரக நாட்டு மாடுகள், இறைச்சிக்காக விற்கப்படுவதை தவிர்த்து, மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கே கொண்டு வர ஆன்லைன் மூலம் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள காங்கேயம் நாட்டு மாடுகளை காப்பாற்றும் முயற்சியில் கொங்க கோசாலை என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், காங்கேயம் மாடுகளை கேரளா போன்ற மாநிலங்களுக்கு இறைச்சிக்கு விற்பனை செய்யப்படுவதை அறிந்த மென்பொருள் பொறியாளர் சிவக்குமார், இதனை தடுக்கும் பணியில் திரும்பியுள்ளார்.

அமெரிக்காவில் நல்ல சம்பளத்தில் பணியாற்றிய இவர், விற்கப்படும் மாடுகளை விவசாயிகளே வாங்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் இலவச தொலைபேசி எண்ணை(1800 121 5662) அறிமுகம் செய்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 250 காங்கேயம் மாடுகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக சிவக்குமார் தெரிவித்துள்ளார். பொது சேவை மனப்பாண்மையுடன் கொங்க கோசாலை அமைப்பு செயல்படுகிறது. இடைத்தரகர் கட்டணம் ஏதும் இல்லாமல், மாட்டின் உரிமையாளரிடம் நேரடியாக விலை பேசி விவசாயிகள் வாங்கி உள்ளனர்.காங்கேயம் ரக மாடுகள் அடிமாடுகளாக போவது தடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஊரடங்கினால் ஒட்டன் சத்திரம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் சந்தை மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் மாட்டை வாங்குவதும் விற்பதும் எளிதாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Software Engineer ,Kangeyam , Meat, Confectionery, Cows, Online, Sales, Software, Engineer, Try
× RELATED திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில்...