×

தோட்டத்திற்குள் புகுந்து பலாப் பழங்களை சாப்பிடும் யானைகள்: விவசாயிகள் கவலை‌

குன்னூர்:  குன்னூரில் பலாபழம் சீசன் துவங்கிய நிலையில் யானைகள் பழங்களை தின்று சேதபடுத்தி வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளான பர்லியார், மரப்பாலம், கே.என்.ஆர். போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. தற்போது பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் சமவெளி பகுதிகளிலிருந்து யானைக்கூட்டங்கள் படையெடுத்து வந்து குன்னூர் சுற்று வட்டார பகுதி பழா தோட்டங்கள் அருகில் முகாமிட்டுள்ளன.  தோட்டங்களில் உள்ள மரத்தில் 16 அடி உயரத்தில் இருக்கும் பழா பழங்களை யானைகள் சர்வ சாதாரணமாக பறித்து உண்ணுகின்றன. அப்போது ஏராளமான பழங்களும் சேதமாகின்றன. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கையொட்டி குன்னூர் மலை பாதைகளில் பழங்களை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் மீதமுள்ள பழங்களை பறித்து விற்பனை செய்யவும் தற்போது விவசாயிகளுக்கு வழியில்லை. இதனால் குன்னூர் சந்தை பகுதிகளில் பலாப்பழங்களை கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்கின்றனர். ஆனாலும் பொது முடக்கத்தால் சந்தைக்கு பொதுமக்கள் அதிகளவில் வருவது கிடையாது. இதனால் பெருத்த இழப்பைச் சந்தித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Tags : garden , Elephants entering,garden, eating jack fruit, Farmers worried
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்தில் 10...