×

ஆம்புலன்சை மறித்து நிறுத்தி வாலிபர் சடலத்தை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: போலீசாருடன் கடும் வாக்குவாதம்

செங்கல்பட்டு: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நஜ்மல் (25). திருப்போரூரில் உள்ள  ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நஜ்மல், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.இதையடுத்து, நஜ்மலின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள், சடலத்தை சொந்த ஊர் கொண்டு செல்ல வசதி இல்லை. அதனால், செங்கல்பட்டிலேயே அடக்கம் செய்யும்படி கூறியதாக தெரிகிறது.

இதைதொடர்ந்து, சடலத்தை புதைப்பதற்கு செங்கல்பட்டு அருகே பெத்தேல் நகர் சுடுகாட்டுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்க`ள் 100க்கும் மேற்ப்பட்டோர், ஆம்புலன்ஸை மறித்து, கொரோனா தொற்றால் வாலிபர் இறந்துள்ளார் இந்த பகுதியில் சடலத்தை புதைக்க கூடாது என கூறி தகராறில் ஈடுபட்டனர்.தகவலறிந்து செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெயராம் ஆகியோர் சம்பவ இடத்து–்கு சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மீண்டும் சடலத்தை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சடலத்துக்காக தோண்டப்பட்ட குழி மூடப்பட்டது.

Tags : dismantling ,burial ,protest , Ambulance, Mavalibar corpse, public protest, police
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...