×

வெளியூர் செல்ல அனுமதி கோரி மரத்தில் ஏறி ஆசாமி ரகளை

திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த படூர் பகுதியை சேர்ந்தவர் பாரதி (50). அதேபகுதியில் இளநீர் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு தேவையான இளநீரை அருகில் உள்ள தோப்புகளில் இருந்து பறித்து வருவார். இதற்காக தனது உறவினரான தஞ்சாவூரை சேர்ந்த திருநாவுக்கரசு (44) என்பவரை வேலைக்கு வைத்து இருந்தார். திருநாவுக்கரசு, தினமும் தோப்புகளுக்கு சென்று இளநீரை பறித்து வந்து கடையில் சேர்ப்பார். இவரது மனைவி, குழந்தைகள் தஞ்சாவூரில் உள்ளனர். கடந்த 60 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. மாதம் ஒரு முறை ஊருக்கு சென்று மனைவி, குழந்தைகளை பார்த்து வந்த திருநாவுக்கரசு, தற்போது, ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திருநாவுக்கரசு, படூர் பகுதியில் உள்ள தென்னை மரம் ஒன்றில் ஏறினார். அப்போது, தன்னை தஞ்சாவூருக்கு அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால், மரத்தில் இருந்து குதிப்பதாக கூச்சலிட்டார்.இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மாமா பாரதி மற்றும் அக்கம்பக்கத்தினர், அவரிடம் பலமுறை எடுத்து கூறியும், கீழே இறங்கவில்லை.

தகவலறிந்து சிறுசேரி தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில், வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, ஏணி மற்றும் கயிறு மூலம் தென்னை மரத்தில் ஏறி திருநாவுக்கரசை மீட்டனர். பின்னர் அங்கு வந்த கேளம்பாக்கம் போலீசார், முறையாக விண்ணப்பித்தால் மட்டுமே சொந்த ஊருக்கு அனுப்ப முடியும். இதுபோல் போராட்டம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்து அவரை அனுப்பி வைத்தனர்.

Tags : Asami , Outdoors, Kelambakkam, Bharathi, Curfew
× RELATED அபுதாபியில் இருந்து சென்னை வந்த...