×

வெளிமாநில தொழிலாளர் விவகாரம் எங்கள் கருத்தையும் கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு

புதுடெல்லி: வெளி மாநில தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் துயரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.       அப்போது, வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையில் குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக் காட்டிய நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு (28ம் தேதி) ஒத்தி வைத்துள்ளனர்.

 இந்த வழக்கில் தனது தரப்பு வாதத்தையும் எடுத்துக் கொள்ள அனுமதி கோரி காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசால் பரிசீலக்கப்பட வேண்டிய சில பொருத்தமான நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags : Congress ,Supreme Court , Foreign Labor, Supreme Court, Congress
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...