×

அத்தியாவசிய மருந்து வீடுகளுக்கு டெலிவரி: மத்திய அரசு பரிந்துரை

புதுடெல்லி: மத்திய சுகாதார துறை செயலாளர் ப்ரீத்தி சுதன், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் சுகாதார பராமரிப்பு குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்கள், சுகாதார செயலாளர்களுக்கு  இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மண்டலங்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கான அத்தியாவசிய மருத்துவ சேவைகள் வழங்கப்படவேண்டும். எந்த சூழ்நிலையின் அடிப்படையிலும் மருத்துவ சேவைகள் மறுக்கப்படகூடாது. அத்தியாவசிய மருந்துகளான ஐஎப்ஏ, கால்சியம், ஓஆர்எஸ், ஜிங்க் உள்ளிட்ட இதர மருந்துகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹோம் டெலிவரி செய்யப்பட வேண்டும்.

குழந்தை பெற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியமும் உறுதி செய்யப்பட வேண்டும். நோய் பாதித்த எந்த மண்டலத்தில் இருந்தாலும் பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு, நோய்தடுப்பு, குடும்ப கட்டுப்பாடு மற்றும் இளம்பருவத்தினரின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படவேண்டும். இதற்கான சேவைகளுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Essential Drug Homes ,Government , Essential Medicine, Delivery, Federal Government
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...