×

கொரோனா தடுப்பு பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 675 மருத்துவர்கள் நியமனம் : சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: கொரோனா தடுப்பு பணிக்காக 3 மாத கால ஒப்பந்த அடிப்படையில் 675 மருத்துவர்களை நியமனம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், உள்ளாட்சி துறை பணியாளர்கள் உள்ளிட்டோரை அரசு தொடர்ந்து நியமனம் செய்து வருகிறது. இதன்படி சமீபத்தில் சில செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், ஒப்பந்த அடிப்படையில் புதிதாக 675 மருத்துவர்களை ரூ. 40 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 3 மாத காலம் மட்டும் பணியமர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்து மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு உடனடியாக பணியில் சேரவும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தேவை இருந்தால் பணி நீட்டிப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும்  தேசிய நலவாழ்வு இயக்ககத்தின் மூலம் நியமிக்கபடுவார்கள். புதிதாக நியமனம் செய்யப்படவுள்ள 675 மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ள 25 மருத்துவ கல்லூரிகளில் பணி அமர்ந்தப்பட உள்ளனர். இதன்படி பெரிய மருத்துவ கல்லூரிகளுக்கு 30 மருத்துவர்களும், சிறிய மருத்துவ கல்லூரிக்கு 20 மருத்துவர்களும்   நியமிக்கப்படவுள்ளனர்.

Tags : doctors ,Health Department ,Corona , Corona, 675 Doctors appointment, Department of Health
× RELATED சென்னை ஐஐடி-யில் மருத்துவர்களுக்கு புதிய உடை கண்டுபிடிப்பு