தேஜஸ் போர் விமான படைப்பிரிவு கோவை சூலூரில் துவக்கம்

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் விமான படை தளம் கடந்த 1965ல் துவங்கப்பட்டது. இந்திய விமானப்படையின் 18வது ஸ்குவாட்ரன்  படைப்பிரிவான இத்தளத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த மிக் 27 ரக போர் விமானங்கள் படிப்படியாக விலக்கப்பட்டன. இதனால் கடந்த 2016ல் இந்த படைப்பிரிவு மூடப்பட்டது. தேஜஸ் ரக போர் விமானங்களை சேர்த்து இந்த படைப்பிரிவை மறு உருவாக்கம் செய்ய விமானப்படை முடிவு செய்தது. இதற்கான நிகழ்ச்சி சூலூர் விமானப்படை தளத்தில் நேற்று நடந்தது. இதில் விமானப்படை தலைமை தளபதி ஏர்சீப்  மார்சல் பதோரியா கலந்து கொண்டு 18வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவை மீண்டும் துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து இந்த படைப்பிரிவில் முழுமையாக உள் நாட்டிலேயே தயாரான அதி நவீன தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி. போர் விமானம் சேர்க்கப்பட்டது. பின்னர் தேஜஸ் விமானத்தில் பதோரியா பயணித்தார்.

Related Stories:

>