×

புலம்பெயர் தொழிலாளரிடம் வேலை வாங்கிவிட்டு கைவிடலாமா?: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: புலம்பெயர் தொழிலாளர்களிடம் வேலை வாங்கிவிட்டு கைவிடலாமா? அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசு மற்றும் அனைவரின் கடமை எனக் கூறியுள்ள ஐகோர்ட் கிளை, கூடுதல் தலைமை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழி லாளர்கள் அனைவருக்கும் நிவாரண உதவி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று  ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று வீடியோ கான்பரன்சிங்கில் விசாரித்தனர்.  அப்போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகிறது’’ என்று தமிழக அரசு வக்கீல் தெரிவித்தார்.  

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இவ்வளவு நாளாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் வேலை வாங்கிவிட்டு, அவர்களை கைவிடுவது ஏற்புடையதல்ல. கேரளாவிலுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து செல்லவிரும்பவில்லை. ஆனால், வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது அரசு மட்டுமின்றி அனைவரது கடமை. இதை பேச்சில் மட்டும் காட்டக் கூடாது’’ என்றனர். பின்னர் நீதிபதிகள், தமிழகத்திலுள்ள புலம் பெயர் தொழிலாளர்களை பதிவு செய்ய என்ன நடைமுறை உள்ளது? பதிவு செய்யாதவர்களுக்கு உதவ  என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.


Tags : Immigrant Worker ,branch ,Madurai , Migrant worker, HC Madurai branch, judges
× RELATED வைகை, காவேரி, குண்டாறு இணைப்பு தமிழக...