×

டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை பட்டியல் உள்ளதா?

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே விலைபட்டியல் ஒட்ட உத்தரவிட வேண்டும் என சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டி  பஞ்சாயத்து  துணைத் தலைவர் குல்லு படையாச்சி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு,  அரசு நிர்ணயித்த எம்ஆர்பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா,  மதுபானங்கள் விற்கும் போது ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா, ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் விலைப்பட்டியல் ஒட்டப்படுகிறதா, அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கண்டுபிடிக்கப்பட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியது. பின்னர் இதுதொடர்பாக ஜூன் 25ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.


Tags : Task Shop ,liquor stores , TASMAC Stores, Liquor, Price
× RELATED டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்