×

கொரோனாவுக்கு 5 பேர் பலி

பெரம்பூர்: பெரம்பூர் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த 62 வயது முதியவர் கடந்த 24ம் தேதி உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.  இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் திருவிக நகர் மயானத்தில் நேற்று மதியம் தகனம் செய்யப்பட்டது. இதேபோல், அயனாவரம் ஞானாம்பாள் கார்டன் 2வது தெருவைச் சேர்ந்த 55 வயது பெண்ணுக்கு கடந்த 22ம் தேதி இவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்றுவந்தார்.  காய்ச்சல் அதிகரிக்கவே கடந்த 24ம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் நேற்று மதியம் திருவிக நகர் தாங்கல் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும், புளியந்தோப்பு திருவிக நகர் 2வது தெருவை சேர்ந்த 56 வயது பெண்மணி மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த 19ம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு கொரோனா உறுதியாகி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 25ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் மாலை ஓட்டேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதேபோல், கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 6வது பிளாக்கை சேர்ந்தவர் 74 வயது முதியவர் உடல்நிலை குறைவால் கடந்த 23ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா உறுதியானது. நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முல்லை நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும், ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை சின்னபாபு தெருவை சேர்ந்த 63 வயது நபர் மூச்சு திணறலால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தபட்டது. அவரது உடல் நேற்று ஓட்டேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.



Tags : Corona 5 , 5 killed , Corona
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...