×

இரண்டு மாதம் தொழில் முடங்கியதால் விரக்தி மெரினா கடலில் குதித்து மெக்கானிக் தற்கொலை

சென்னை: ஊரடங்கு உத்தரவால் கடந்த 2 மாதங்களாக தொழில் முடங்கியதால் போதிய வருமானம் இன்றி தவித்து வந்த மெக்கானிக் ஒருவர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கேசவன் (60). மெக்கானிக்கான இவர் அதே பகுதியில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை நடத்தி வந்தார். கொரோனா தடுப்பு காரணமாக கடந்த 2 மாதங்களாக மெக்கானிக் கடை மூடப்பட்டிருந்ததால் போதிய வருமானம் இன்றி கேசவன் குடும்பம் நடத்த வழியில்லாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்தினரிடம் புதுப்பேட்டை வரை சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கேசவன் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையே மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவு மண்டபம் பின்புறம் உள்ள கடலில் அவரது உடல் நேற்று முன்தினம் மாலை கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த அண்ணாசதுக்கம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பன்நோக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மெக்கானிக் தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கடலில் குதித்தார் என தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : mechanic ,suicide ,career breakdown ,Marina Sea ,marina , Marina Sea, mechanic, suicide
× RELATED திருமணமான 4 நாளில் புதுப்பெண் தற்கொலை