×

செல்போன் பறித்த வாலிபர் கைது

புழல்: புழல் அடுத்த புத்தாகரம் வானவன் நகரில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் வடமாநிலத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.  இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சாலையில் நின்றபடி தனது குடும்பத்துடன் செல்போனில் வடமாநில கூலி தொழிலாளி நவாஸ் ஷேக் (26) என்பவர் பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது பைக்கில் வந்த மர்ம நபர், நவாஸ் ஷேக்கின் செல்போனை பறித்தார். இதனால் நவாஸ் ஷேக் அலறி சத்தம் போடவே, மர்ம நபரை அக்கம் பக்கத்தினர் சுற்றி வளைத்து புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவை சேர்ந்த சரத்குமார் (20) என்பதும், அவர் இதேபோல் பல்வேறு வழிப்பறி மற்றும் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.


Tags : Cell phone seized, youth arrested
× RELATED வாகன விபத்தில் வாலிபர் பலி