×

மொரீஷியசில் சிக்கிய 98 பேர் சென்னை திரும்பினர்

சென்னை:  கொரோனா ஊரடங்கால் மொரீசியஸ் நாட்டில் பல இந்தியர்கள் சிக்கி தவித்தனர். இதையடுத்து போர்ட் லூயிஸ் நகரில் இருந்து ஏர் மொரீசியஸ் சிறப்பு தனி விமானம் நேற்று  முன்தினம் மாலை 6 மணிக்கு 98 பேருடன் சென்னை வந்தது. அவர்களுக்கு சமூக இடைவெளியில் மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்க சோதனை நடத்தி முடிக்கப்பட்டது.  பின்னர் அவர்களில் 36 பேர் மேலக்கோட்டையூர்  தனியார் கல்லூரி விடுதிக்கும், 34 பேர் சென்னையில் உள்ள நட்சத்திர சொகுசு ஓட்டலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 28 பேர், தனி பஸ்சில் ஐதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  அதேபோல் தென் மாநிலங்களில் தங்கியிருந்த மொரீசியஸ் நாட்டை சேர்ந்த 110 பேருடன் அதே ஏர் மொரீசியஸ் சிறப்பு தனி விமானம் நேற்று காலை 7.55 மணிக்கு போர்ட் லூயீஸ் நகருக்கு புறப்பட்டுச் சென்றது.


Tags : persons ,Mauritius ,Chennai. , Mauritius, Chennai, Corona, curfew
× RELATED சென்னையில் குணமடைந்து வீடு...