×

நத்தத்தில் குண்டும், குழியுமான சாலையால் ஓட்டுனர்கள் அவதி

நத்தம்: நத்தத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் யூனியன் அலுவலகம், மீனாட்சிபுரம், பஸ் நிலைய ரவுண்டானா, மூன்றுலாந்தர், அவுட்டர், மெய்யம்பட்டி, சமுத்திராபட்டி, பூதகுடி, சுண்டக்காய்பட்டி பிரிவு, கொட்டாம்பட்டி செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இந்த சாலைகள் வழியாக மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், சுற்றுவட்டார பகுதிகளுக்கும் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இதனால் இந்த சாலைகள் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன.

இதனால் டூவீலர்களில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி டூவீலர்களிலிருந்து தவறி விழுந்து காயமடைகின்றனர். அவ்வப்போது சிறு விபத்துகளும் நடக்கின்றன. இதனால் டூவீலர் ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர். டூவீலர் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Drivers ,pit road , Nam, bomb, pit road
× RELATED மதிமுக சார்பில் டூரிஸ்ட் வேன் டிரைவர்களுக்கு நிவாரணம்