×

உத்தரகாண்டில் 46 இடங்களில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீ : 51.43 ஹெக்டேர் அளவுக்கு வனப் பகுதிகள் நாசம் : தீயில் கருகிய விலங்குகள்!!

டெல்லி: கொரோனா ஒருபக்கம் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் காட்டுத் தீயால் பெரும் சேதத்தை வனங்கள் சந்தித்து வருகின்றன. வட இந்தியாவில் ஏற்கனவே கடும் வெயில் காரணமாக அனல் காற்று வீசிக் கொண்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு கடும் வெயில் தாக்கி வருகிறது. அனலைத் தாங்க முடியாமல் மக்கள் தவிக்கும் நிலையில்,  உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

இதனால் அங்கு பெருமளவில் வன இழப்பு ஏற்பட்டுள்ளது . இந்த தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.தீ கட்டுக்குள் வராமல் இருக்க இந்த கடும் வெயிலும் முக்கியக் காரணமாகும். உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 46 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு பற்றி எரிந்து கொண்டுள்ளது. குமான் பிராந்தியத்தில்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இங்கு மட்டும் 12 இடங்களில் தீப்பிடித்து எரிந்து கொண்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கிட்டத்தட்ட 51.43 ஹெக்டேர் அளவுக்கு வனப் பகுதிகள் இதுவரை தீயில் கருகிப் போய் விட்டன. கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட அரிய வகை விலங்குகளுக்கு தற்போது அழிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.தற்போதைய காட்டுத்தீயால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Forest fire ,places ,Uttarakhand , Uttarakhand, unrestrained, wild fire, 51.43 hectares, forest areas, ruin, animals
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...