×

கொரோனா தடுப்புப் பணிகள் மேலும் வலுவடையும் வகையில், 675 மருத்துவர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை : கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 675 மருத்துவர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸுக்கு எதிராக மருத்துவர்கள் தினந்தோறும் போராடி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்தில் 675 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒப்பந்த மருத்துவர்கள் நியமனம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பன்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. இப்பணிகளில் ஒரு பகுதியாக மருத்துவப் பணியாளா்கள் தேர்வு வாரியம் மூலமாக ஏற்கனவே 530 மருத்துவா்கள், 2 ,323 செவிலியா்கள், 1,508 ஆய்வக நுட்பவியா்கள் மற்றும் 2,715 சுகாதார ஆய்வாளா்கள் பணியமா்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனா்.மேலும், ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு பணியாற்ற   2, 570 செவிலியா்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மேலும் வலுவடையும் வகையில், 675 மருத்துவர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவர்கள் அனைவரும் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.  இதற்காக அவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கவும் முடிவு செய்ப்பட்டுள்ளது.மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்த மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.  தேசிய நலவாழ்வு இயக்கத்தின் மூலம் மருத்துவர்களை நியமிக்கப்படுவர். தேவைக்கேற்ப பணி நீட்டிப்பு செய்யப்படும்.எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : CM Palanisamy ,doctors , Coronation, Prevention, Functions, Strengthening, Reinforcement, 675, Doctors, Chief Palaniswami, Directive
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை