×

ஜெயிலு... பெயிலு... குடிமகனின் ரகளை

புதுச்சேரி: புதுச்சேரியின் தற்போதைய ஹாட் டாபிக்கே மதுபானங்களின் விலை உயர்வு விவகாரம்தான். 2 மாதமாக மது கிடைக்காதது, வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்திற்கு சென்று மது குடித்தது, அங்கிருந்து மது கடத்தி வந்து போலீசிடம் மாட்டியது என புதுச்சேரி மதுபிரியர்கள் ஏகத்துக்கு டென்ஷனாகியிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஒவ்வொரு வகை மதுபானத்திற்கும் இதுவரை இல்லாத அளவுக்கு விலையை உயர்த்திருக்கிறார்கள். அதிலும் பல வகை மதுபானங்களுக்கு இருமடங்குக்கு மேல் விலையை உயர்த்திருக்கிறார்கள். இதனால் விரக்தியின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார்கள் புதுவை குடிமகன்கள். 2 மாதம் கழித்து கடை திறப்பதால் கூட்டம் முண்டியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு மதுக்கடைகள் முன்பும் சமூக இடைவெளியை கடைபிடித்து குடிமகன்கள் மது வாங்கி செல்லும் வகையில் நீண்ட தூரத்திற்கு ஒரு மீட்டர் இடைவெளியில் கட்டங்கள் வரைந்துள்ளனர். ஆனால் அந்த கட்டங்களில் நின்று வாங்கவே ஆள் இல்லை. புதுச்சேரியில் உள்ள குடிமகன்களில் பெரும்பாலானோர் ஒரு 100 ரூபாய் நோட்டை எடுத்து சென்று ஃபுல்லாக குடித்து வருவார்கள். குறைந்த பட்சம் ரூ.40க்கு ஒரு குவார்ட்டர் கிடைக்கும் என்பது அவர்களுக்கு வசதியாக இருந்தது.

தற்போதைய நிலையில் புதுச்சேரிக்காரர்கள் தமிழகத்திற்கே சென்று குடித்துவிட்டு வந்து விடலாம் என்ற எண்ணத்தை வரவைத்துவிட்டது. ரூ.80க்கு விற்கப்பட்ட பீரே தற்போது ரூ.180க்கு விற்கிறது. இந்த விலையேற்றத்தால் குடி
மகன்கள் சாராயம் வாங்க சென்றுவிட்டனர். இந்நிலையில் புதுச்சேரியின் குடிமகன் ஒருவர் இந்த விலையேற்றத்தை கண்டித்து பேசியதோடு, என்னை கைது செய்தாலும் பரவாயில்லை. ஏன் விலையேற்றினீர்கள்? என டென்ஷனாகி பேசியிருக்கிறார். அவர் பேசிய அந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: “தமிழ்நாட்டுலயே 170 ரூபாய்க்கு குவார்ட்டர் கிடைக்குது. இங்க ஏன் 190க்கு விற்கிறீங்க? என்னையா கவர்மெண்ட் இது? எடப்பாடி 170க்கு விற்கிறார். நாராயணசாமி ஏன் 200 ரூபாய்க்கு விற்கிறார்? அந்த கிரண்பேடி என்ன அட்டகாசம் செய்றாரா? நீ என்னை ரிமாண்ட் பண்ணு. ஜெயில்னா ஒரு பெயில் இருக்குது. காலை 8 மணிக்கு வந்து நிற்கிறோம். 10 மணி ஆகியும் இதுவரை கடை திறக்கல. என்ன காரணம்? ஒரு குவார்ட்டர் 170, 130க்கு விக்கிறாங்க. இங்க 200 ரூபாய்க்கு எப்படி வாங்கி குடிக்கிறது? கிரண்பேடி தப்பு பண்றாரா? நாராயணசாமி பண்றாராங்களா? என்னை ஜெயில்ல கூட போடுங்க. இதோ.. வண்டி நிக்குது. ஜெயில்ல பெயிலு உண்டு ஏன் இந்த விலை? இவ்வாறு அதில் பேசியுள்ளார்.      



Tags : Citizen , Jail, Bail, Citizen's roll
× RELATED நத்தம் பட்டா மாறுதலுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பம்