×

தாராபுரம் அருகே சூறாவளியுடன் கன மழை கோழிப்பண்ணை தரைமட்டம்: கோழிகள் உயிரிழந்தன

தாராபுரம்:  தாராபுரத்தில் நேற்று முன்தினம் இரவு சூறாவளியுடன் பெய்த கன மழைக்கு கோழிப்பண்ணைகள் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்தன. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காளியப்ப கவுண்டன் புதூர், தொப்பம்பட்டி, சின்னிய கவுண்டன்புதூர், கிணத்து காட்டுப்புதூர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை துவங்கி இரவு 9 மணி வரை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.இதனால், ஏராளமான வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. இதில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவரின் வீட்டு மேற்கூரை ஓடுகள் காற்றில் பறந்து கீழே விழுந்தன. இதில், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவசண்முகம் காயமடைந்தார்.

காளியப்பன் கவுண்டன் புதூர் கிராமத்தில் கந்தசாமி, பரிமளா தம்பதிகளுக்கு  சொந்தமான கோழி பண்ணையை சூறாவளி காற்று தரைமட்டமாக்கியது. இன்னும் 15 நாட்களில் விற்பனைக்கு தயாராக இருந்த 4500 நாட்டுக்கோழிகளில் 2500 கோழிகள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன.இதன் அருகே உள்ள கிருஷ்ணமூர்த்தி, சித்ரா ஆகியோரது கோழிப் பண்ணைகளும் சரிந்து விழுந்து தரைமட்டமானது, இவர்களது கோழிப்பண்ணையில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கோழிப்பண்ணை செட் சேதமடைந்தது. தொப்பம்பட்டி, காளியப்ப கவுண்டன் புதூர், சின்னய கவுண்டன்பாளையம்  ஆகிய கிராமங்களில் மட்டும் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள கோழிப்பண்ணைகள், மற்றும் வீடுகள் சேதமடைந்தன. மின் கம்பங்கள் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்ததில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Tags : ground ,Darapuram Chicken ,Tarapuram , Heavy rains , Tarapuram , chicken ground
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...