×

மதுவை தவிர காய்கறி, அரிசி கூட விற்கல.. இதுல பட்டு சேலை வாங்க யார் வருவா? கடைகள் மூடிட்டாங்க. மக்கள் நடமாட தடை. விற்பனை மட்டும் கோடியில் வேண்டுமாம்:

* பேராசை படும் கோ-ஆப்டெக்ஸ் மீது ஊழியர்கள் அதிருப்தி

சென்னை: ஊரடங்கு நேரத்திலும் வருவாய் குறைவை காரணம் காட்டி கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் டார்ச்சர் செய்வது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேசிய அளவில் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 573 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.  இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி முதல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. இந்த காலத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர பல்வேறு கட்டுப்பாடுகள். மேலும் வேலையின்றி உள்ள மக்களிடம் பணமும் இல்லை. காய்கறி, அரிசி வாங்கவே சிரமப்பட்டனர். இதில் வட்டிக்கு வாங்கி மது குடித்தவர்கள் வேறு வகை.இந்நிலையில் சென்னையில் மண்டல  நிர்வாகம் தரப்பில் கடந்த ஆண்டை காட்டிலும் ஏன்  வருவாய் கோ-டெக்ஸ் விற்பனை வருவாய் குறைவாக இருக்கிறது என்று ஊழியர்களிடம் கேட்டு குடைச்சல் கொடுக்கிறதாம்.

இதுகுறித்து ஊழியர்கள் கூறும் போது,  ‘முதல் மூன்று ஊரடங்கு காலத்தில் எந்த தளர்வும் அறிவிக்கவில்லை. அதனால் ஜவுளிக்கடை திறப்பதற்கு அனுமதி இல்லை. ஆனால் சென்னை கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் கடந்த ஆண்டு விற்பனையை குறிப்பிட்டு இந்த ஆண்டு ஏன் விற்பனை இல்லை என்று செல்போனில் ஊழியர்களை டார்ச்சர் செய்கிறார். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடியே 6 லட்சம் ரூபாயாக இருந்த வருவாய் இந்த ஆண்டு மட்டும் ஏன் ₹2 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய் இந்த ஆண்டு ஏன் 25 லட்சம் ரூபாயாக குறைந்தது ஏன் என்றும் கேள்வி கேட்கிறார். தற்போது மக்கள் வெளியே வராத நிலையில் ஊழியர்களிடம் நெருக்கடி காட்டுவது ஏன் என தெரியவில்லை. மேலும் விற்பனை இலக்கை எட்டாத ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலாளர் கூறியுள்ளார். இது கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது’ என்கின்றனர்.


Tags : Stores ,Cody , Champagne, vegetable, rice, co-optex
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...