×

மின் இணைப்புகளை சரி செய்யும் முன் வீட்டில் உள்ள இன்வெர்ட்டர், ஜெனரேட்டர்களை ‘ஆப்’ செய்ய வேண்டும்: ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: மின் விபத்துக்களை தடுக்கும் வகையில், வீடுகளில் இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் இருந்தால் அவற்றை ‘ஆப்’ செய்துவிட்டு மின் கம்பங்களில் பணியை தொடங்க வேண்டும் என ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக மின்வாரியம் ஊழியர்ளுக்கு அனுப்பி உள்ள கடிதம்: மின் கம்பிகளில் பணிகள் மேற்கொள்ளும்போது பணியிடத்தில் தவறாமல் நில இணைப்பு செய்ய வேண்டும். தகுந்த நில இணைப்பு செய்த பின்னரே பணியைத் தொடங்க வேண்டும். வீடுகளில் உள்ள இன்வர்டர் மற்றும் ஜெனரேட்டர்களில் ‘சேஞ்ச் ஓவர்’  சரியாக வேலை செய்யாவிட்டால் ‘பேஸ்’  மூலமும் ரிட்டன் சப்ளை வர வாய்ப்புள்ளது.

மேலும் இன்வர்டர் இயக்க நிலையில் இருக்கும் போது நியூட்ரல் சர்வீஸ் வயர்யை மின்கம்பத்திலிருந்து விடுவிக்கும் பட்சத்தில், நியூட்ரல் கிடைக்காமல் மின் இணைப்பில் உள்ள நியூட்ரல் முழுவதும் ரிடர்ன் சப்ளை வர வாய்ப்புள்ளது. ஆகையால் மின் கம்பங்களில் சர்வீஸ் வயர்களை மாற்றும் பணியாளர் சர்வீஸ் வயர்களை கழட்டி விட வேண்டிய சூழ்நிலை ஏற்படுமாயின், சம்பந்தப்பட்ட சர்வீஸ் வயர்கள் உள்ள வீடுகளில் இன்வர்ட்டர்/ஜெனரேட்டர் இருந்தால் அவற்றை ‘’ஆப்’ செய்துவிட்டு பணியை தொடங்க வேண்டும். மின் கம்பங்களில் நுகர்வோர்கள் தன்னிச்சையாக மாட்டியுள்ள தெரு விளக்குகள் போன்ற உபகரணங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : generators ,home , Electrical connections, Inverter generators' costs
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...