×

அண்ணா பல்கலையில் 3 பேராசிரியர்களுக்கு தொற்று

சென்னை: தமிழகத்தில் கடந்த வாரம் ஊடரங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும். அப்படி பணிக்கு வரும் பணியாளர்களை இரண்டு பிரிவாக பிரித்து சுழற்சி முறையில் பணிக்கு வரவழைக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டு இருந்தது.  இதையடுத்து, அண்ணா பல்கலைக் கழகமும் கடந்த வாரம் முதல் பணியாளர்களை பணிக்கு வர உத்தரவிட்டு இருந்தது. இதன்படி கடந்த ஒரு வாரமாக 50 சதவீதம் என்ற அடிப்படையில் பணியாளர்கள் பணிக்கு வருகின்றனர்.

 இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 பேராசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நானோ தொழில் நுட்பத்துறை பேராசிரியர் ஒருவர், எலக்ட்ரிக் துறை பேராசிரியர் ஒருவர், மேனுபேக்சரிங் துறையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் என 3 பேர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், அண்ணா பல்கலைக் கழக பணியாளர்கள் இடையே தற்போது வைரஸ் தொற்று தொடர்பாக பீதி ஏற்பட்டுள்ளது. அதனால் பலர் பணிக்கு வரத் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால், அனைத்து பணியாளர்களும் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று பல்கலைக் கழக துணை வேந்தர் வற்புறுத்தி வருகிறார். இதனால் பலரும் அச்சத்துடனேயே பணிக்கு வருகின்றனர்.

Tags : professors ,Anna University , Anna University, 3 Professors, Corona
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...