×

கொரோனாவுக்கு பூ வியாபாரி பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பூ வியாபாரி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பம் பகுதியை சேர்ந்த 51 வயது மதிக்கத்தக்க பூ வியாபாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் நேற்று முன்தினம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பூ வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மூச்சுத்திணறல் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிபட்டு வந்துள்ளார்.


Tags : Flower dealer ,Corona Corona ,florist , Corona
× RELATED கொரோனா சிகிச்சைக்கு வந்த முதியவர்...