×

வடசென்னை பகுதியில் கொரோனாவுக்கு 4 பேர் பலி

பெரம்பூர்: வடசென்னை பகுதியில் கொரோனா பாதிப்பால் 4 பேர் இறந்தனர். சென்னை திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட கொளத்தூர் ஜி.கே.எம் காலனி 5வது தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான 87 வயது முதியவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, கடந்த 24ம் தேதி அதிகாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கடந்த 25ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் மேற்பார்வையில்  நேற்று திருவிக நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
* தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி அண்ணா நகர் 3வது தெருவை சேர்ந்த 66 வயது நபர், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி விடுதியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 19ம் தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் உயிரிழந்தார் இவரது உடல் நேற்று பெரம்பூர் பி.பி.ரோடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
* ராயபுரம் புது  காமராஜர் நகரை சேர்ந்த 46 வயது பெண்ணுக்கு கடந்த 23ம் தேதி கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு  தொடர் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று உயிரிழந்தார். இவரது உடலை  காசிமேடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  
* திருவெற்றியூர்  ராஜா கடை எழுத்துக்காரன் தெருவை சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு கொரோனா  தொற்று காரணமாக கடந்த 23ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு, தொடர் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று  உயிரிழந்தார். இவரது உடல் காசிமேடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : Corona Four , Northeastern, Corona, 4 killed
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...