×

கேரளாவில் பெண்ணை கொன்ற கொலை வழக்கில் பாம்புவுக்கு போஸ்ட் மார்ட்டம், டிஎன்ஏ சோதனை: சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க போலீஸ் அதிரடி

திருவனந்தபுரம்: பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கில் வாலிபர் மற்றும் பாம்பு கொடுத்தவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள அடூர் பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ்(29). இவரது மனைவி உத்ராவை கடந்த மார்ச் 2ம் தேதி சூரஜின் வீட்டில் வைத்து பாம்பு கடித்தது. சிகிச்சையில் உடல்நலம் தேறிய உத்ரா, தன் பின்னர் தாய் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் கடந்த மே 7ம் தேதி உத்ராவை மீண்டும் பாம்பு கடித்து. ஆஸ்பத்திரி ெகாண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை விஜயசேனன் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் சூரஜ், மனைவியை பாம்பை கடிக்க வைத்து கொன்றதை ஒப்புக்கொண்டார். சூரஜ் மற்றும் பாம்பை விற்பனை செய்த சுரேஷ் கைது செய்யப்பட்டனர்.

சூரஜ், சுரேஷை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்தின்போது 115 பவுன் நகை, சொகுசு கார், 5 லட்சம் ரொக்கம் மற்றும் 70 சென்ட் நிலத்தையும் சூரஜ் பெயருக்கு எழுதி கொடுத்துள்ளனர். மேலும் கேட்கும்போதெல்லாம் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வந்துள்ளார். சூரஜின் தங்கை படிப்பு செலவிறகும் விஜயசேனன் பண உதவி செய்து வந்துள்ளார். சொத்துக்கள் மற்றும் பணம் சூரஜ் பெயரில் இருப்பதால் உத்திராவை கொலை செய்ய பணம் தவிர வேறு காரணமும் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். திருமணத்திற்கு முன் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் சூரஜ் பணியாற்றி வந்தார்.

அங்கு சில பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது உத்திராவிற்கு தெரிய வந்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுவும் கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. வீட்டில் எலி தொல்லை இருப்பதாக கூறி சுரேஷிடம் பாம்பு வாங்கியுள்ளார். முதலில் பாம்பு கடித்தபோது, உத்ராவை தாமதமாக தான் சூரஜ் ஆஸ்பத்திரி கொண்டு சென்றுள்ளார். பின்னர் உத்திராவின் பெற்றோர்  விரைந்து வந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மகளை காப்பாற்றினர். இதனால் அவரது முதல் திட்டம் தோல்வியடைந்தது. இரண்டாவது மீண்டும் அவரை கொல்ல சூரஜ் திட்டமிட்டார்.

தந்தை வீட்டில் இருந்த உத்ராவை வாரம் 2 முறை சூரஜ் ஆஸ்பத்திரி கொண்டு சென்று வந்தார். சம்பவத்தன்று உத்ராவை ஆஸ்பத்தரி அழைத்து செல்ல ஒரு நாள் முன்னதாகவே சூரஜ் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். அன்று இரவு அனைவருக்கும் சூரஜ் ஜூஸ்  கொடுத்துள்ளார்.  உத்ராவிற்கு கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்தன்று பிடிபட்ட பாம்பை கொன்று வீட்டருகே புதைத்திருந்தனர். இந்த பாம்பை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. நேற்று அஞ்சல் போலீசார், வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை டாக்டர்கள் ெசன்று பாம்பை தோண்டி எடுத்தனர்.

பாம்பின் விஷ பல், எலும்புகள், மூளை பகுதி சேகரிக்கப்பட்டது. 3 மணி நேரம் பிரேத பரிசோதனை நடந்தது. பாம்பின் டிஎன்ஏவும் பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. உத்திராவை கடித்தது அந்த பாம்புதானா எனறு கண்டறிய இந்த பரிசாதனை நடத்தப்படுகிறது. இது குறித்து கொல்லம் எஸ்பி ஹரிசங்கர் கூறுகையில், இது மிக சவாலான வழக்கு. இருப்பினும் விசாரணை நடத்தி 80 நாட்களுக்குள் குற்றபத்திரிகை தாக்கல் செயய முயற்சிப்போம் என்றார்.

Tags : murder ,Kerala , Kerala, woman, murder case, snake, post mortem, DNA test
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...