×

கொரோனாவிலும் தாக்கரே அரசை கவிழ்க்க பாஜ முயற்சி

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜ கூட்டணியில் இருந்து கடந்தாண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு விலகிய சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருக்கிறார். இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இது மக்கள் மத்தியில் தாக்கரே அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையே ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி தாக்கரே அரசை கவிழ்க்க, ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை பாஜ கையில் எடுத்துள்ளது.

ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை பாஜ.வை சேர்ந்த  இம்மாநில முன்னாள் முதல்வர்களான தேவேந்திர பட்நவிஸ், நாராயண் ரானே ஆகியோர் சந்தித்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி வலியுறுத்தி உள்ளனர். அதோடு, ஆளும் கூட்டணியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ.க்கள், தலைவர்களை இழுக்கும் முயற்சியிலும் பாஜ ஈடுபட்டுள்ளது. அதை முறியடிப்பது தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : government ,BJP ,Corona ,Thackeray , Corona, Thackeray Government, BJP
× RELATED திருமாவளவனை முற்றுகையிட முயற்சி பாஜக -...