×

2வது நாளில் சென்னையில் இருந்து 39 விமானங்கள் இயக்கம்

சென்னை:   சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று 2வது நாளாக 39 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டது. இதில் 20 விமானங்கள் சென்னையில் இருந்து டெல்லி, ஐதராபாத், வாரணாசி, ராஜ்கோட், அகமதாபாத், அந்தமான், பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம், மதுரை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்கு சென்றன. அதேபோல் 19 விமானங்கள் அந்தந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு திரும்பின. அதேசமயம் அந்தமான், டெல்லி போன்ற விமானங்களை தவிர மற்ற விமானங்களில் குறிப்பாக தமிழ்நாட்டிற்குள் மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு செல்லும் விமானங்களில் சுமார் 30 முதல் 40 பயணிகளே இருந்தனர்.



Tags : flights ,Chennai , Chennai, 39 flights operation
× RELATED சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து