×

குண்டும் குழியுமாக மாறிய நாசரேத் - இடையன்விளை சாலை: வாகன ஓட்டிகள் திணறல்

நாசரேத்: நாசரேத்தில் இருந்து பிரகாசபுரம், நெய்விளை, இடையன்விளை வழியாக குரும்பூர், திருச்செந்தூர், ஏரல், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிக்கு அரசு பஸ் உள்ளிட்ட பிற வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் மக்கள் சென்று திரும்புகின்றனர். இந்த சாலை வழியில் பிரசித்தி பெற்ற நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஜெப ஊழியம், வனத்திருப்பதி பெருமாள் கோயில் உள்ளிட்டவை உள்ளன. இங்கு நாள் தோறும் ஏராளமான பக்தர்களும் சென்று திரும்புகின்றனர்.
இதில் பிரகாசபுரம், நெய்விளை, இடையன்விளை சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதனால் பாதசாரியாக மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்று திரும்புபவர்கள் தடுமாறி விழுந்து காயமடையும் நிலை தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இச்சாலை அபாய நிலை குறித்து அரசு அதிகாரிகள் தெரியப்படுத்தியும் இன்னும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆதலால் அதிகாரிகள் பார்வையிட்டு இந்த அபாய நிலையில் காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags : Nazareth - Idiyanvilai Road ,Motorists ,road , Nazareth - Idaiyanvilai Road, Motorists, Strain
× RELATED மாஸ்க் அணியாமல் ஊர் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்