×

புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை மத்திய, மாநில அரசுகளின் தோல்வி; உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டிருப்பதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுமுடக்க காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்சனை குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது. இது குறித்து வரும் 28-ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து செல்லும் வழக்கை பதிவு செய்து இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கி இருக்கக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களது மாநிலங்களுக்கும், தங்களது கிராமங்களுக்கும் நடந்தும், சைக்கிளிலும் போவதை பார்க்க முடிகிறது. மத்திய, மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தான் இது தெளிவாக காட்டுவதாக உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். வரும் வியாழக்கிழமை மத்திய அரசு இது சம்பந்தமான விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. நிறைய முக்கியமான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது.

இவர்களுக்குத் தேவையான உணவு அல்லது தங்கும் இடமோ செய்து தருவதற்கு கூட மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வில்லை என்பதையும் கண்டித்திருக்கிறார்கள். இது சரியான நேரம் மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இது ஒரு மிகப் பெரிய தோல்வியாக தான் நாங்கள்  பார்க்கிறோம். இவர்களை காப்பாற்றுவதற்கு தேவையான இலவச போக்குவரத்து வசதி, இலவச  உணவு, இருப்பிடம் ஆகியவை செய்வதற்கு மத்திய அரசு தவறிவிட்டது. இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துளீர்கள்  என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது.

Tags : governments ,The Supreme Court ,migrant workers ,state , Migrant Workers, Central, State Government, Supreme Court, Condemnation
× RELATED பஞ்சுமிட்டாயில் நஞ்சு கலப்பு…