×

அப்துல் கலாம் தங்கள் நாட்டில் காலடி வைத்த நாளான மே 26-ம் தேதியை, தேசிய அறிவியல் நாளாக அறிவித்து, கௌரவித்த சுவிட்சர்லாந்து அரசு !!

சுவிட்சர்லாந்து : அப்துல் கலாம் தங்கள் நாட்டிற்கு வந்த மே 26-ம் தேதியை தேசிய அறிவியல் நாளாக அறிவித்து சுவிட்சர்லாந்து அரசு அவரை கௌரவித்துள்ளது .முன்னாள் குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான இந்தியாவை குறிப்பாக தமிழகம் ராமேஸ்வரத்தை சொந்த ஊராக கொண்ட டாக்டர். அப்துல் கலாமின் பிறந்த நாளை (அக்டோபர் 15) உலக மாணவர்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது. தற்போது, சுவிட்சர்லாந்து அரசு, தங்கள் நாட்டுக்கு அப்துல் கலாம் வருகை தந்ததை நினைவு கூரும் வகையில், மே 26-ம் தேதியை அந்நாட்டின் தேசிய அறிவியல் நாளாக அறிவித்தது.

அதன்படி, சுவிட்சர்லாந்தில் இன்று தேசிய அறிவியல் நாள்.கடந்த 2006ம் ஆண்டு மே 26-ம் தேதி, ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் அப்துல் காலம் அவர்கள் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க அங்கு சென்றுள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியத் தலைவர் ஒருவர் சுவிட்சர்லாந்து சென்றது அதுவே முதல் முறை என்பதால், அந்நாடு அதனை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. தற்போது அப்துல்கலாமை கௌரவிக்கும் வகையில், கலாம் தங்கள் நாட்டில் காலடி வைத்த நாளையே தேசிய அறிவியல் தினமாக அறிவித்து சிறப்பு சேர்த்தது சுவிட்சர்லாந்து.

Tags : Government ,Abdul Kalam ,Swiss ,National Science Day , Abdul Kalam, Kalady, National Science Day, May 26, Hon.
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்