×

நளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: நளினி மற்றும் முருகன் வாட்ஸ் அப் மூலம் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.மேலும் முருகன். லண்டனில் உள்ள தங்கையுடனும் பேச அனுமதிக்கள் வேண்டும்.

ஏற்கனவே காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை கேட்ட  நீதிபதிகள் வாட்ஸ்அப் காலில் பேசுவதற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்று கேள்வி எழுப்பினர்.பின், மனுவுக்கு நாளை மறுதினம் பதிலளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : Murugan ,Nalini ,relatives ,Tamil Nadu ,government , Nalini, Murugan, Whats Up, Relatives, Speaking, Permission, Problem, Government of Tamil Nadu, High Court, Question
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...