×

கொரோனாவை ஒழிக்கப் போவதாக கூறி, சுற்றிலும் தீ எரியவிட்டு உயிரோடு உடலை பூமிக்குள் புதைத்து பூஜை நடத்திய சாமியார்!!

தூத்துக்குடி : கொரோனா வைரஸை உலகில் இருந்து விரட்டி அடிக்க உலக விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் போராடி வரும் நிலையில் நிலையில்,கொரோனா உலகத்தை விட்டு நீங்க வேண்டும் என்பதற்காக சாமியார் ஒருவர் தனது உடலை பூமிக்குள் புதைத்துக் கொண்டு சுற்றிலும் தீவைத்து பூஜை செய்த சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த சாமியார் சீனிவாசன் என்பவர் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவை ஒழிக்க போவதாக கூறி, தனது பிரத்தியங்கிரா தேவி கோவிலில் தனி ஆளாக சிறப்பு பூஜை ஒன்றை நடத்தி உள்ளார்.அந்த கோவிலில் குழி தோண்டி அதனுள் இறங்கிய சாமியார் சீனிவாசன், தனது உடல் முழுவதையும் பூமிக்குள் புதைத்துக் கொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டியபடி, தன்னை சுற்றி நெருப்பை எரியவிட்டு மந்திரங்களை உச்சரித்தபடி வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.பூமிக்குள் உடலை புதைத்துக் கொண்டு பூஜை செய்வதன் மூலமாக கொரோனா உலகத்தை விட்டே ஓடிவிடும் என்று நம்புகிறார் இந்த சாமியார் சீனிவாசன்.

Tags : Saman ,prelate ,pooja ,earth , Corona, fire, alive, body, earth, burial, puja, samiyar
× RELATED உடல் பாகங்கள் திருடப்பட்டதாக புகார்;...