×

ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பணம் திருப்பி வழங்குவதற்கான அட்டவணை தயார்: விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என தகவல்

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியிடங்களில் அதிகளவில் கூட வேண்டாம் என்றும், பயணங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தாங்கள் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்களை ரத்து செய்ய வேண்டிய சூழல் பொதுமக்கள் ஏற்பட்டது. இதற்காக ரயில் நிலையங்களில் உள்ள கவுன்ட்டருக்கு வந்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதாவது ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 21ம் தேதி தொடங்கி வரும் ஜூன் 21ம் தேதி வரை ரத்து செய்யப்படும் ரயில்களில் முன்பதிவு செய்த டிக்கெட்களை அளித்து கட்டணத்தை திரும்பப் பெற 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. முன்னதாக 3 நாட்களுக்குள் டிக்கெட்டை அளித்து கட்டணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விதிமுறை உள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப் படுவதால் இதனை தளர்த்தி ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதைப் பே௱ல் ரயில்கள் ரத்து செய்யப்படாமல், பயணிகளே டிக்கெட்டை ரத்து செய்ய விரும்பினால் அவர்களுக்கும் கட்டணத்தை திரும்ப பெற 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

ரயில் முன்பதிவு டிக்கெட் ரத்து

இதேபோல் உதவி எண் 139 மூலம் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய விரும்புவோரும் அடுத்த 3 மாதங்களுக்குள் டிக்கெட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் யாரும் ரயில்வே நிலையங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து தெற்கு ரயில்வே சார்பில் கூறியதாவது ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பணம் திருப்பி வழங்குவதற்கான அட்டவணை தயார் செய்யப்படுகிறது. அதற்கான பட்டியல் மற்றும் எந்தெந்த ரயில் நிலையங்கள், எந்த தேதியில் ரயில்வே கவுண்டர்களில் வழங்கப்படும் என்பது குறித்து விரைவில் தெற்கு ரயில்வே சார்பில் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : announcement , Schedule ,refund, canceled tickets, formal announcement, made soon
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...