×

பொய் சொன்னால் தப்பில்லை; ஆண் - பெண் இருவரும் விருப்பத்தின்பேரில், பாலியல் உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை இல்லை; ஒடிசா உயர்நீதிமன்றம் கருத்து..!

புவனேஷ்வர்: ஆண் - பெண் இருவரும் தங்கள் விருப்பத்தின்பேரில், பாலியல் உறவு வைத்துக்கொள்வது இந்திய தண்டனை சட்டப்படி பாலியல் வன்கொடுமை குற்றம் ஆகாது என ஒடிசா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தை சேர்ந்த அச்யுத் குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 19 வயதான பழங்குடியின இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இருவருக்கும் இடையே பாலியல் ரீதியான உறவு இருந்த நிலையில், அந்தப் பெண் இரண்டு முறை கர்ப்பம் அடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து அச்யுத் குமார், பாலியல் உறவு வைத்துக்கொண்டதாகவும், இரண்டு முறை மாத்திரைகள் கொடுத்து கருவைக் கலைத்ததாகவும் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதன் பெயரில், அச்யுத் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கீழ் நீதிமன்றத்தில் அச்யுத் குமார் தாக்கல் செய்ய ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட நிலையில், ஒடிசா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இந்த மனு நீதிபதி எஸ்.கே.பனிகிரஹி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவர் ஜாமீன் வழங்கியதுடன் அரசு தரப்புக்கு ஒத்துழைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மிரட்டக்கூடாது என்று அச்யுத் குமாருக்கு நிபந்தனைகள் விதித்தார். மேலும், திருமணம் செய்துகொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும், ஆண் - பெண் இருவரும் தங்கள் விருப்பத்தின்பேரில், பாலியல் உறவு வைத்துக்கொள்வது இந்திய தண்டனை சட்டப்படி பாலியல் வன்கொடுமை குற்றம் ஆகாது.

பெண்கள், விருப்பத்தின்பேரில் பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் விவகாரங்களில் பாலியல் வன்கொடுமை வழக்கை பயன்படுத்துவது சரிதானா? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றார். இருப்பினும், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, ஏழை பெண்களை திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து ஆண்களால் பாலியல் உறவு கொள்ளப்பட்டால், அதற்கு தீர்வு காண பாலியல் வன்கொடுமை சட்டங்கள் தவறி விடுகின்றன என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags : escape ,Odisha High Court , There is no sexual harassment, both male and female; Odisha High Court
× RELATED ஜாமீன் நிபந்தனையாக அரசியலில்...