×

சின்னாளபட்டியில் சிறு மழைக்கே வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் சிறு மழைக்கே வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். சின்னாளபட்டி பேரூராட்சி 12வது வார்டுக்குட்பட்டது கோவிந்தசாமி குறுக்கு தெரு. இங்கு முறையான வடிகால் வசதி இல்லாததால் சிறு மழைக்கே, மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று சின்னாளபட்டியில் மழை பெய்த போது கோவிந்தசாமி குறுக்கு தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்து விட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீர் புகுவது குறித்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக கலெக்டரை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம்’ என்றார்.

Tags : Chinnalapatti Chinnalapatti , Sewage ,drainage, Chinnalapatti
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!