×

மனிதர்கள் மீதான முதற்கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனையை தொடங்கியது அமெரிக்காவின் நோவாவேக்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம்

வாஷிங்டன் :  அமெரிக்காவின் நோவாவேக்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம், மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பூசி பரிசோதனையை, முதல் கட்டமாக தொடங்கியுள்ளது. உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், NVX-CoV2373 என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக, நோவாவேக்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரலில் தெரிவித்திருந்தது. அந்த தடுப்பூசியை முதல் கட்டமாக மனிதர்கள் மீது பரிசோதிக்க தொடங்கியுள்ளதாக நோவாவேக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனையில், தடுப்பூசியின் திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து வரும் ஜூலையில் முதல் கட்ட முடிவுகள் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து மனிதர்கள் மீதான இரண்டாம் கட்ட பரிசோதனை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடத்தப்பட உள்ளதாகவும் நோவாவேக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Tags : USA ,Novavex Pharmaceutical Company ,coronavirus trial , Humans, Corona, Vaccine, Testing, USA, Novavex, Drug, Product, Company
× RELATED அமெரிக்காவில் பரபரப்பு சரக்கு கப்பல்...