×

ஜுன் 15-ம் தேதி முதல் மீன்பிடிக்கச்செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றம்

ராமேஸ்வரம்: படகுகள் பழுதுபார்க்கும் பணி முடியாததுடன், தற்போது இறால்மீன் ஏற்றுமதியாளர்கள் கொள்முதல் செய்யமுடியாது என்பதாலும் ஜுன் 15-ம் தேதி முதல் மீன்பிடிக்கச்செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க தலைவர் மகத்துவம் தலைமையில் இன்று ராமேஸ்வரம் அனைத்து மீனவர் சங்க கூட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொரோனா ஊரடங்கில் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதை கருத்தில் கொண்டு 61 நாட்கள்  மீன்பிடி தடைகாலத்தை குறைத்து ஜூன் 1-ம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் படகுகள் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வராத காரணத்தால்  பெரும்பாலான படகுகளில் பழுதுபார்க்கும் பணிகள் முழுமைப்பெறவில்லை. மேலும் படகுகளில் மீன்பிடிக்கச்செல்ல மீனவர்கள் வருகையும் குறைவாக உள்ளது. இதுதவிர இறால் மீன் ஏற்றுமதி கம்பெனிகளில் மீன் ஏற்றுமதி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர்களும் மீன் வாங்குவதை நிறுத்தி உள்ளனர். எனவே ஜுன் 1 ம் தேதி மீன்பிடிக்கச்செல்வது இயலாது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஜூன் 15-ஆம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.


Tags : fishermen ,Rameshwaram , Rameshwaram ,fishermen', fishing ,June 15
× RELATED இலங்கை சிறையிலிருந்து...