×

உள்நாட்டு விமான சேவை தொடக்கம் எதிரொலி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் ஆன்மிக பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்?...

டெல்லி: உள்நாட்டு விமான சேவை தொடங்கியுள்ளதால், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் ஆன்மிக பயணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத்  தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த மார்ச் 25 முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள், தனிநபர் விமானங்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா  தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் சேவை தொடங்கப்படும் என கடந்த 21ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதே நேரத்தில் சர்வதேச விமான போக்குவரத்து இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்  என தெரிவித்தது. இதையடுத்து நாடு முழுவதும் நேற்று முதல் மீண்டும் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியது. மேலும், இன்று முதல் சர்வதேச விமானங்கள் இயங்கவும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இதற்கிடையே, கொரோனா ஊரடங்கு முடிந்து, விமான சேவை ஆரம்பித்த உடன், தன் தொகுதி தொகுதியான வாராணாசி செல்ல பிரதமர் நரேந்திர மோடி ஆர்வமுடன் உள்ளதாகவும், வாராணாசி சென்று காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய  பிரதமர் நரேந்திர மோடி காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைபோல், இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், ஆந்திரா மாநிலம் சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என  விரும்புவதாகவும், துணை ஜனாதிபதி வெங்கையா, குஜராத்தின் துவாரகாவில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது, உள்நாட்டு விமான சேவை தொடங்கியுள்ளதால் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் ஆன்மிக பயணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இவர்கள் மூவரும், ஒரே நாளில் பயணம் மேற்கொண்டால் பிரச்னை ஏற்படுமே என விமானப்படை அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். மூன்று வி.வி.ஐ.பி.,க்களும் ஒரே நேரத்தில் வெளியூருக்கு பயணம் செய்யக் கூடாது என்பது,  எழுதப்படாத விதி உள்ளதுகுறிப்பிடத்தக்கது.


Tags : President ,Vice-President , Echoes of Domestic Aviation Initiative: President, Vice President, Prime Minister Includes Information
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...