×

ராஜபாளையத்தில் பகலிலும் எரியும் தெருவிளக்குகள்: நகராட்சி அலட்சியம்: நகராட்சி அலட்சியம்

ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் பகுதியில் நகராட்சியின் அலட்சியத்தால்தெருவிளக்குகள் பகலிலும் தொடர்ந்து எரிவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜபாளையம் நகர் பகுதியான தென்காசி சாலை, சிங்கராஜா கோட்டை செல்லும் பகுதிகளில் பகல் நேரத்திலேயே தெருவிளக்குகள் பல நாட்களாக எரிகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்று புகார் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜபாளையம் நகர் பகுதி மக்கள் கூறுகையில், தெருவிளக்கு மற்றும் சாலையோர விளக்குகள் அனைத்தும் நகர் பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் மின்சார  கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. இவை பகல் நேரங்களில் எரிவது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே, மின் சிக்கன நடவடிக்கை தேவை எனக்கூறும் நகராட்சி, தெருவிளக்குகளை பகலில் எரியாமல் இருக்க உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Tags : Rajapalayam ,Street ,Rajapalayam: Municipal , Street burning,daylight, Rajapalayam,Municipal negligence
× RELATED அதிகாரிகள் அலட்சியத்தால் நீண்ட நாளாக மூடிகிடக்கும் பஞ்சாயத்து அலுவலகம்