×

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கு சலுகை: உள்நாட்டு விமான சேவையை தொடர்ந்து தனிநபர் விமானம், ஹெலிகாப்டர்கள் இயக்க மத்திய அரசு அனுமதி...!

டெல்லி: கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த மார்ச் 25 முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள், தனிநபர் விமானங்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் சேவை தொடங்கப்படும் என கடந்த 21ம் தேதி மத்திய அரசு  அறிவித்தது. அதே நேரத்தில் சர்வதேச விமான போக்குவரத்து இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

இதையடுத்து நாடு முழுவதும் நேற்று முதல் மீண்டும் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை அதிகாலை 4.45 மணிக்கு மகாராஷ்டிராவின் புனே நகருக்கு இண்டிகோ விமானம்  முதலில் புறப்பட்டு சென்றது. மேலும், இன்று முதல் சர்வதேச விமானங்கள் இயங்கவும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, இன்று காலை 9.25 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னை பன்னாட்டு விமான  நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்படுகிறது.

இந்நிலையில், தனிநபர் விமானம், ஹெலிகாப்டரை இயக்க மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள்  தங்கள் சொந்த பணத்திற்காக சொந்த விமானம், ஹெலிகாப்டர் வைத்துள்ளனர். தற்போது, அவர்கள் தங்கள் சொந்த விமானத்தில் பயணம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.



Tags : Cinema celebrities ,leaders ,government ,Central , Concession to cinema celebrities and political leaders: Central government permits helicopters to operate aircraft
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...