×

சில்லி பாயின்ட்...

* ஆஸ்திரேலியாவில் அக்டோபர்  நவம்பர் மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 தொடர் ஒத்திவைக்கப்படுவது அநேகமாக உறுதியாகிவிட்ட நிலையில், மாற்று அட்டவணை தயாரிப்பது குறித்து ஐசிசி குழு நேற்று ஆலோசனை நடத்தி உள்ளது.
* கடந்த மார்ச் 11ம் தேதி லிவர்பூல்  அத்லெடிகோ மாட்ரிட் அணிகளிடையே சாம்பியன்ஸ் லீக் போட்டியை நடத்தியது கொரோனா வைரஸ் தொற்று பரவலை அதிகமாக்கிவிட்டது என்று இங்கிலாந்து சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியைக் காண 52,000 ரசிகர்கள் திரண்டது குறிப்பிடத்தக்கது.
* டெஸ்ட் போட்டிகளுக்கான தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பேற்க டீன் எல்கர் ஆர்வம் தெரிவித்துள்ளார்.
* சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக களமிறங்கத் தயாராக இருப்பதாக அனுபவ ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
* ‘விராத் கோஹ்லி, ஸ்டீவன் ஸ்மித் போன்றவர்களுக்கு இணையான திறமை மிக்கவர் பாபர் ஆஸம். ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடரை தள்ளிவைப்பதில் அவசரம் காட்டக் கூடாது’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
* பந்தை பளபளப்பாக்க எச்சிலை உபயோகிக்கக் கூடாது என்று தடை விதித்திருப்பது வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கூறியுள்ளார்.

Tags : World Cup T20 , World Cup T20 Series
× RELATED சில்லி பாயின்ட்...